"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆன்மிக வெங்காயத்தை உறிக்கலாமா? - Dr.ருத்ரன்

Go down

ஆன்மிக வெங்காயத்தை உறிக்கலாமா? - Dr.ருத்ரன்

Post by RAJABTHEEN on Fri Feb 11, 2011 5:39 pm

இன்று ஒரு பதிவைப்படிக்க நேரிட்டது, அதில், சாமியார்களும் சைக்யாட்ரிஸ்ட்களும் ஒன்றுதான், இரண்டில் எங்குபோனாலும் பரவாயில்லை, வாழ்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எழுதியிருந்தது.இரண்டு நாட்களுக்கு முன்தான் யாரையும் திட்டாமல், கோபப்படாமல் பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன், அதற்குள் இது கண்ணில் பட்டுவிட்டது!
பதிவுலகம் தனியொரு பிரசுரப்பெட்டகம். யார் வேண்டுமானாலும் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆசிரியர்க்குக் கடிதம் என்ற பாவனையில் ஆஹா பேஷ் பேஷ் என்று எழுதினால்கூடப் பிரசுரம் ஆகாத எழுத்துத்திறன் கொண்டவர்கள் கூட கருத்துக்களை அள்ளித்தெறிக்கலாம்.
மக்கள்முன் தன் கருத்துக்களைச்சொல்ல தைரியம் இல்லாதவர்கள் கூட அநாமதேயங்களாக வந்து கருத்து சொல்லலாம்..கருத்துச்சுதந்திரம் நிச்சயம் வரவேற்று வள‌ர்க்கப்படவேண்டியது தான், ஆனால், கருத்துக்கள் சரியோ தவறோ சில மன‌ங்களைச் சென்றடையும். படிக்கும் நேரத்தில், வாழ்வின் நிர்ப்பந்தத்தில் தவிக்கும் மனங்கள் தவறா சரியா என்று பார்க்காமல், திசைதவறிப் போகும். இதற்காகத்தான், குறையுள்ள கருத்தோ முரணான கருத்தோ பதிவு செய்யப்பட்டால் அதற்கு மாற்றாக நம் கருத்துக்களையும் பதிவு செய்வது அவசியமாகிறது.

சாமியார்கள் எனப்படுபவர்கள் சிலநேரங்களில் சரியான விஷயங்களைச் சொல்வது போல் தோன்றும். அடிப்படையில் அனைவருக்கும் உள்ள சுயபுத்தி என்பது சொல்லாத விஷயத்தை அவர்கள் கூறிவிடுவதில்லை, ஆனால் அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் அற்புதவிளம்பர வர்ணஜோடனை, அவர்கள் சொல்வதாய் காசு வாங்கிக்கொண்டு விவரிக்கும் நிழலெழுத்தாளர்கள் மனநல நிபுணர்களுக்குக் கிடையாது. ஆனால் மனநல மருத்துவர்களிடம் அடிப்படையாக அறிவியல் இயங்குகிறது.
பூஜ்யத்திலிருந்து பூஜ்யம் போனால் மீதி ஒரு பூஜ்யம் இருக்கும் என்பதை நிரூபிக்க எதை நம்புவீர்கள்? உபநிஷத்தையா algebraவையா? சாமியார்களைப்பற்றி விட்டுவிடுவோம் எங்கள் அறிவுக்கொம்புகள் நன்கு முளைத்துக் கூராக இருக்கின்றன என்று சிலர் சொல்லிக்கொள்ளலாம், அவர்கள் சாமியார் என்பதை வெட்டி அங்கே குரு என்பதை cut and replace மாற்றிவைத்துப் பேசுவார்கள். அறிவுஜீவித்வ நிறத்திலொரு கண்ணாடி அணிந்து பார்த்தால் இதுவும் சரியென்றே தோன்றும். 'சாமி கும்பிடு" என்று நேரடியாகச் சொல்லாத சாமியார்கள் பலர்' தாங்களே சாமி' என்று ஆகிவிடுவதை உற்று அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் கூடத் தெரியும்.
"இவர்களை சந்தித்த பின்பு தற்கொலை எண்ணங்களிலிருந்து மீண்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். தனது கர்வம், பேராசை மற்றும் தீய பழக்கங்களால் தனது வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டவர்கள் எல்லாம் இது போன்ற குருக்களிடம் சென்று மீண்டு வந்திருக்கிறார்கள்." என்று அந்தப்பதிவில் எழுதப்பட்டுள்ளது!
அப்படியா? எத்தனைபேர்? என்ன சதவிகிதம்? மேலும் இந்தக்கதைகளைச் சொன்னது யார்? பாதிக்கப்பட்டவரா அல்லது பாதிப்பின் மூலம் ஏதோ ஒரு லாபத்தைப் பார்த்தவரா? இந்தக் கதைகள் எந்த அறிவியல் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளன? ஒரு திறமையான விளம்பர நிறுவனம் என் கைவசம் இருந்தால் நான் கூட ஒபமாவைத் தற்கொலை செய்துகொள்வதிலிருந்து மீட்டு அமெரிக்க அதிபர் ஆக்கினேன் என்று மக்களிடையே கதை பரப்பமுடியும். இப்படிச் சொன்னால் என் மீது வழக்கு வரும் நான் சிறைக்குப்போவேன், ஆனால் இப்படி சாமியார்கள் கூறிகொண்டு திரிவதை யாரும் கேள்வி கேட்பதில்லை!
“எனவே எதையும் அறிவியல்ரீதியாக சிந்திப்பவன் என்று கூறிக்கொண்டு மட்டையடியாக, ஆன்மிக குருக்களிடம் செல்பவர்களை கிண்டலடிக்க வேண்டியதில்லை. மூட நம்பிக்கைகளை வலியுறுத்தாமல், நெருக்கடி மிக்க மனித மனத்திற்கு ஒரு அமைதியை தந்தால், தனி மனித வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவந்தால், அது ஒரு ஞானத் தேடல் என்ற அளவோடு நின்றுவிட்டால், இன்றைய உலகத்தில் ஆன்மிக குருக்களுக்கும் ஒரு பெரும் தேவை இருக்கத்தான் செய்கிறது.” இதுவும் அந்தக்கட்டுரையிலிருந்துதான்!
இந்த ஆன்மிகத்தேடல் ஒரு சிக்கலான வியாபாரம். வாங்க முடிவு செய்துவிட்டால் வாங்கிவிடவேண்டும், கேள்விகள் இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. பேரங்களும் சாத்தியமில்லை! வாங்கியதைப் பரிசோத்தித்துப் பார்த்துவிட்டுத் திரும்பத்தரவும் அனுமதியில்லை! இந்தப் பொருளை நான் வாங்கினேன் அது வேலை செய்யவில்லை என்று பிறரிடம் கூறுவதும் சாத்தியமில்லை. ஒரு மருத்துவரிடம் சென்று சரியாகவில்லை என்றால் இன்னொரு மருத்துவரை நாடலாம், அல்லது தெரிந்தவர்களிடம் 'அவனிடம்போகாதே' என்று அறிவுறுத்தலாம். சாமியார்/குரு விஷயத்தில் வாங்கிக்கொண்ட சமாச்சாரம் வேலை செய்யவில்லை என்றால், உனக்கு அதைப் பயன் படுத்தும் தகுதி இல்லை என்றே மீதி முட்டாள்கள் அனுமானிப்பார்கள்.
ஒரு மனநல மருத்துவன் உருவாக பள்ளியிறுதி தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று முதலில் MBBS பெறவேண்டும், பிறகு நான்கரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பேற்று முதுகலை படிப்பில் நுழைய வேண்டும். அதன்பிறகு ஒழுங்காகப் படித்தால் தான் அதிலும் தேர்வாகி ஒரு மனநல மருத்துவனாக வெளியில் சொல்லிக்கொள்ளவே முடியும். இதைவிடச் சுலபமாகவும் விரைவாகவும் ஒரு குருவாகக் காட்டிக்கொள்ள முடியும். காட்டிக்கொள்ள என்று குறிப்பிடக்காரணம் உண்மையான நேர்மையான‌ குரு தன்னைக் காட்டிக்கொள்வதில்லை.

சாமியார்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோர் சாதாரணமாகப்பேசும் போது பெரிய தவறுகள் வெளிப்படையாகத் தோன்றுவதில்லை, ஆனால் அவர்களே மனவியல் பற்றிப்பேசும் போது நிறைய‌ உளறுவார்கள். ஓஷோ ஜேகே போன்ற மேதைகளானாலும்! சுருக்கமாக சொல்வதென்றால் மனநல நிபுணர்கள் செய்வது ஒரு அறிவியல் சார்ந்த தொழில், சாமி/ குரு செய்வது நேர்மையில்லாத வியாபாரம். ஆரம்பத்தில் இலவசமாக உரைகளை வழங்கிய குருமார்களின் இன்றைய நிதிநிலையைச் சிந்தியுங்கள்.

ஒருமுறை 1986ல் நான் அசல் (அவர் விட்டுச்சென்ற நிறுவனத்தில் இப்போதிருப்பவை அவரது நகல்கள்)குரு என் முதுகைத்தொட்டு ஒரு மணியடித்தார். குண்டலினி எழும்பும் என்றார். முதுகின் மேல் தோல் அவர் தொட்டதால் குறுகுறுப்படைந்ததைத்தவிர வேறெதுவும் நடக்கவில்லை.
இன்னொரு (இன்று பிரபலமாக பல நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் வசீகரமாக வியாபாரம் செய்யும்) 'குரு' 1996ல் அப்போது நான் தொலைகாட்சியில் சற்று பிரபலமாக இருந்ததால் இரண்டு மணிநேரம் என்னிடம் தன் ஆன்மிகச்சக்தியைக் காட்ட முயன்றார்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் சந்திக்காமலோ சிந்திக்காமலோ நம்மிடையே ஆன்மிடம் விற்கும் 'குரு'மார்களை நான் சாடவில்லை. நம்பிக்கை தவறில்லை, நம்புமுன்னோ நம்பும்போதோ கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் அது தவறாக முடியும். இங்கே நான் குறிப்பிட்டப் பதிவின் எழுத்தாளரைப்போல.

அவர் குறிப்பிட்டதைப்போல் 'அவர்களும்' தேவை என்று எப்படி எடுத்துக்கொள்வது? கரப்பான்பூச்சி கூடத்தான் சுழலில் ஒரு தேவைக்காக இருக்கிறது, அதைச் செல்லப்பிராணியாக வளர்த்துக் கொஞ்சலாமா?

- ருத்ரனின் பார்வை


_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum