"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நீங்களும் ஹீரோதான்.. - அண்ணாமலையான்

Go down

நீங்களும் ஹீரோதான்.. - அண்ணாமலையான்

Post by RAJABTHEEN on Fri Feb 11, 2011 5:52 pm

வணக்கம் தோழர்களே. எல்லாரும் நல்லாருக்கீங்களா? நீங்க யாராவது பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ இத்யாதி விருது எதாவது, நீங்க அறிஞ்சோ அறியாமலோ, தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச எதுக்காவது (உதா: தலைவன்(ர்) வாழ்கன்னு கத்திருந்தா கூட போதும்) இந்த வருஷம் வாங்கிருக்கீங்களா? அப்டி யாராவது ‘வாங்கி’யிருந்தா சொல்லுங்க, சந்தோஷத்த பகிர்ந்துக்கலாம். ஏன்னா, இந்த உலகத்துல இப்பலாம் எத வாங்கறதுனாலும் ரொம்ப ஈஸி, காசே இல்லன்னாலும் கையெழுத்துக்கு தருவாங்க... ஆமாங்க, பொண்டாட்டியே கையெழுத்துல சேந்துக்கறா, பிரிஞ்சுடறா..!!? (யார் கூட வேனுன்னாலும், சம்மந்த பட்டவங்களும், ஜட்ஜும் போடற கையெழுத்தால!) அது மட்டுமில்லேங்க, உங்களை எப்படி எதாவது வாங்க வைக்கறதுங்கற வித்தைல எல்லா யாவரிங்களும் (அரசியல் யாவாரம் உட்பட) தலகீழா நின்னு தண்ணி குடிச்சவங்க.. எப்டி இருந்தாலும் கடேசில ஏமாளி நீங்கதான்..இன்னிய நெலமைக்கி நீங்க கடைத்தெருவுக்கு குடும்பத்தோட போனா திரும்பி வரும் போது, நீங்க பல முக்கியமான நேரம் கவனமா இருந்த, உங்க அளவான குடும்பத்துல ஒரு டிக்கெட் கூடியிருந்தா கூட ஆச்சரியமில்லே.. அந்தளவுக்கு உங்கள ஏமாத்தி எதயாவது உங்கள்ட்ட வித்துர்றதுதான் அவங்க சாமர்த்தியம். ஒரு உதாரணம் பாருங்க, “யானை வாங்குனா பூனை ஃப்ரீ”, அப்டின்னு ஒரு விளம்பரம் வந்தா, கூட்டத்த கட்டுபடுத்த மிலிட்டரி தான் வரனும்.. ஏன்னா, யானைக்கும் பூனைக்கும் என்ன சம்மந்தம்?, வாங்குனா என்ன பிரயோஜனம்? அப்டின்னு யாரும் யோசிக்கறதுல்ல.. ஃப்ரீ அவ்ளோதான்! வுழுந்தடிச்சி ஓடி வாங்கிட வேண்டியது.. பாக்கிய அப்புறம் பாத்துக்கலாம்னு.. அப்புறம் பாத்தாதான் தெரியும், யான கக்கா போனா கூட அத பக்காவா க்ளீன் பன்ற தளவாடமெல்லாம் அதே கம்பெனிலதான் வாங்கி தொலையனும்னு.. அதும் அவங்க சொல்ற விலைக்கி.. இப்டி நீங்க நொந்துகிட்டிருக்கும் போதுதான் அந்த ஃப்ரீ பூனை மியாவ் மியாவ்ன்னு (ஸ்ரேயாவ நெனைக்காதீங்க) இடுப்புல பொறாண்டும்.. என்னன்னு பாத்தா, சாப்புட எலியும், சைட் டிரிங்ஸ்சா பாலும் கேக்கும். அதயும் பாத்தா அந்த கம்பெனிதான் தயாரிக்கும்... “எப்பவும் குடிங்க ஏழரைப்பால்”னு அதுக்கு விளம்பரம் வேற..! சரி பால்தானேன்னு வாங்க போனா அங்கதான் உங்களுக்கு ஏழரை ஆரம்பிக்கும்.... பால் கம்பெனில வாயெல்லாம் பல்லா, ரெகுலரா 6 வருஷத்துக்கு காண்ட்ராக்ட் போட்டாத்தான் வாங்கலாம்னு தலயில கல்ல போட்டு சொல்வாங்க.. (பூனை அத்தன வருஷம் இருக்குமா? இருந்தாலும் நம்மளோடயே இருக்குமா? அப்டியே இருந்தாலும் நாம இருப்போமா?) இத மாதிரி (வாங்கறப்ப வராத) சனியன் புடிச்ச சந்தேகம்லாம் இப்பத்தான் வரும்.


இன்னும் சில பேரு, 300 ரூவாய்க்கு 35000 பொருளுன்னு ஒரு நல்ல ஞாயித்துகிழமையா விளம்பரம் கொடுப்பான் (அதயும் இந்த பேப்பர் காரங்க இலவச இனைப்புல போட்டு நம்மள ஏமாத்துவாங்க)... நம்ம பொது ஜனம் எல்லா சாமானயும் எண்ணி வாங்க கூட நேரமில்லாம அடிச்சி புடிச்சி வாங்கிட்டு போவாங்க.. அப்புறம், செய்கூலி இல்ல, சேதாரம் இல்லன்னு தமுக்கடிச்சி சொல்றவங்க, சொல்லாம விடறது தரமும் இல்லங்கறதுதான்... மேலும், சில ஓட்டல் காரங்க திருவிழா நடத்துவாங்க, புளி கொழம்பு காரம், புன்னாக்கு வாரம் அப்டின்னு.. அங்கனயும் அடிதடிதான். சில இடத்துல 32 அடி தோசையும் 6 வாளி சாம்பாரும் ஐநூறே ரூவாதான்னு வாய்க்குள்ளயே ஆசைய அலய வுடுவாங்க.. ஏன், எதற்கு, எப்படின்னு எவன் சொன்னாலும் யோசிக்காத நம்ம மஹா ஜனம் எல்லா இடத்துலயும், காவல் துறையே வந்து கூட்டத்த கட்டுப்படுத்துனாலும் அந்த கூட்டத்துல முட்டி மோதி வெற்றி வாகை சூடிடும்...


இப்பலாம் சினிமா போறதுன்னா கேக்கவே வானாம், தனியா போனா ஒரு நாள் சம்பளமும், குடும்பத்தோட போனா ஒரு வார சம்பளமும் நிச்சய காலி... கூடவே மருத்துவ செலவு வேற.. (தியேட்டர்ல விக்கற தின்பண்டங்கள், படத்தால வர தல வலி அப்புறம் இந்த ரசிக குஞ்சுகள் போடற கூச்சலால வர காது வலி எக்ஸ்ட்ரா..) இதில்லாம போற வர ரோடெல்லாம் இந்த மிக்ஸி வாங்குங்க, பைக் வாங்குங்க, முடிஞ்சா பரலோகத்துக்கு டிக்கெட் வாங்குங்கன்னு ஒரே விளம்பர பேனர் தொல்ல..


சரி, வீட்டுலயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்கயும் டிவி வழியா வந்து. “இந்த மாத்திரய போடுங்க, ராத்ரி பூரா ஜோருங்க”னு. (ராத்ரி பூரா ஜோருனா காலயில? டர்ர்ருதானா?). ஏன் இப்டி தொரத்தி தொரத்தி மக்கள வாங்கறதுக்கு தூண்டறாங்க? பொருளாதாரம் வளந்துடுச்சா? இல்லியே.. (இன்னும் 50%-60% சதவீத நம் மக்கள் நல்ல தண்ணிருக்கும், உணவுக்கும் நாயாதான் அலயுறாங்க) அப்புறம்? உலகத்துல அதிகளவு நுகர்வோர் இருக்கற நாடு நம்மளுது, அது மட்டுமில்ல, மிக பரந்த ஏரியாவுல அமைஞ்ச நாடுங்கறதால வித்தவன தேடுறது கஷ்டம், விற்பனைக்குப் பின்னான சேவைகளை பத்தியும் அதிகளவில் தெரியாதுங்கறதாலயும், உலகத்துல எங்க, எத தயாரிச்சாலும், அந்த குப்பைய கொட்டி காசாக்க முதல்ல நம்ம நாட்டத்தான் தேர்ந்தெடுக்கறாங்க.. பாருங்க பாதி ஜனத்தொகைக்கு ஒரு வேள சோத்துக்கே வழியில்லன்னு சர்வே சொன்னாலும், அம்பத்தஞ்சு கோடி செல் கனெக்‌ஷன் வச்சுருக்கற நாடு நம்ம தாய் நாடுதான்.. ஏன்னா சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ.


நம்மாளுங்க நெறய பேரு இன்னிக்கு கொறஞ்சது ஒரு நாளக்கி நூறு ரூவாயிலேருந்து(ஃப்ரீ) , ஆயிரம் ரூவாய்க்கும் மேல சம்பாதிக்கறாங்க. ஆனா அத எப்படி செலவு பன்றாங்க? யோசிச்சு பாத்தா பாதிக்கும் மேல வேஸ்ட்டா தான் இருக்கும்.. டிவி வச்சிருக்கவங்க, எல்சிடி டிவி, எல்ஈடி டிவி அப்டின்னு பல டிவிக்கள பெருமைக்கு வாங்கி சுவத்துல மாட்டுனாலும், அதுல வழக்கம் போல அண்ணன்-தம்பி டிவி கம்பெனியோட விளம்பரக்காரன் தான் வந்து வாஆஆஆடான்னு கத்தி எவனுமெ வராத தியேட்டருக்கு கூப்புடுவான்... இத மறந்துட்டு, எல்லாரும் பட்ஜெட்ல ஆஃபர், மந்திரி வார்த்தை சூப்பர்னு வருஷா வருஷம் ஏமாறது மட்டுமில்ல, தொனக்கி நண்பர்களயும் இழுத்து கொல்லயில விடுவாங்க... இத மாதிரி பல உதாரணம் சொல்லலாம்..


_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: நீங்களும் ஹீரோதான்.. - அண்ணாமலையான்

Post by RAJABTHEEN on Fri Feb 11, 2011 5:52 pm

ஒரேயொரு வழில வருமானம் வாங்கிக்கிட்டு, நாம ஒவ்வொரு வருஷமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூவாய்க்கி நம்ம இந்தியாவுல பிரமாதமான யாவாரம் பன்றோம். எல்லாம் நான், நீங்க சேந்து செஞ்சது... இப்டி எக்கச்சக்கமா கண்டது, கேட்டதையெல்லாம் வாங்கறோம், இன்னும் பல வழில நாம சம்பாதிக்கற பணத்த செலவு பன்றோம்.. பணத்த மட்டுமல்ல நேரத்தையும் கூட தான்.. எதெதுக்கோ காலத்தையும், காசையும் செலவழிக்கற நாம சுத்தமா மறந்துட்டது ஒன்னு இருக்கு. அது? அதுக்கு காரனமும் பணமும், மனசு மறத்து போனதும்தான்.......


நம்ம இந்தியாவுல கடேசி இனம் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கறவங்கதான்.. ஆனா அவங்களுக்கும் அடுத்து ஒரு இனம் அரசாங்க கணக்குலே வராம இருக்கு தெரியுமா? அவங்கதாங்க ஆதரவற்றோர், அநாதைகள், மன நலமில்லாமல் பெற்றோர், உறவினரால் கைவிடப்பட்டு தெருவில் அலைபவர்கள் மற்றும் மனசாட்சி இல்லாம கைவிடப்படும் முதியோர்கள். சின்ன சின்ன தளிர் குழந்தைகள், முதியோர்கள் இரண்டு வகையினரும் எதிர்பாக்குறது என்ன? காசோ, நல்ல சுவையான உணவோ, உடையோ இல்ல.. அன்பு... அன்பு ஒன்னுதான்... இன்னிக்கி ஆதரவற்றோர், அநாதைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அப்டிங்கற விஷயம் பெரிய அளவுல இருக்கறதுக்கு காரனம் நாம பொறுப்பற்றதனமா இருக்கறதுதான்.. நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருக்கிறோம்...


அதெல்லாம் கிடையாது நான் எப்பவுமே மாச சம்பளத்துல 2% இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒதுக்கிடுறேன்னு சொல்றீங்களா? அப்டி நீங்க ஒதுக்கறத பதுக்கத்தான் பல பேரு ரெடியா இருக்காங்கன்னு ஞாபகம் வச்சுக்கங்க... அப்டி நீங்க ஒதுக்கறது கூட டாக்ஸ் ஃப்ரீயானு உங்க சுயநலம் பாத்துதானே? அது மட்டுமில்லே கடைதெருவுலயோ, கார் நிக்கற சிக்னல்லயோ கடமைக்கு சில்லறையோ, ஒர்ரூவாயோ தூக்கி போட்டுட்டு தர்மம் தல காக்கும்னு நம்பிக்கிட்டு போறவங்களும் தப்புதான் பன்றீங்கன்னு புரிஞ்சுக்குங்க... ஏன்னா பிச்சை எடுக்கறதுக்குன்னு பல கொழந்தகள கடத்தறாங்கன்னு. கொழந்தகள இழந்த அந்த பெற்றோர்கள் பாவம் இல்லியா? இதெல்லாம் யோசிக்காம நம்ம தல தப்புனா போதுன்னு சில்லறயில புண்னியம் தேடுறோம் நாம..

இந்த முதியோர்கள் இருக்காங்களே அவங்க நெலம ரொம்ப மோசம்.. யாருமே இல்லாம இருக்கறவங்கதான் அநாதங்க, (யாரோ யாரோடயாவது சேந்தாத்தான் கொழந்த பொறக்கும், அப்புறம் எப்டி அநாத? பொறுப்ப தட்டிக் கழிச்சிட்டு போற மனிதம் செத்த பெற்றோர்கள் செய்யற வேல அது) ஆனா பாருங்க, எல்லாரும் இருந்தும் பாத்துக்கற பொறுமையும், அன்பும், கடமயும் மறந்துட்டு சில ஆயிரம் ரூவாய இல்லத்துல கட்டிட்டு பெற்றோர்கள தவிக்க விட்டுட்டு போறாங்களே, அவங்கள என்ன செய்யறது? அந்த அன்ப மறந்த வாரிசுகள நெனச்சே எவ்வளவோ பெரியவங்க உயிர விட்டுருக்காங்க.. ஏக்கமே உயிர கொல்லுங்கறதுக்கு சாட்சியா எத்தன உயிர் போயிருக்கு தெரியுமா?


குப்ப தொட்டியிலே போட்ட கொழந்தங்க, திருடிட்டு வந்து பிச்ச எடுக்க வைக்கற புள்ளங்கனு, இப்டி லட்சக்கணக்கான இளம் தளிர்கள் வெயில்லயும், மழையிலயும் தெருவுல வெறும் சில்லறை காசுக்காக திரியறாங்கன்னு யாராவது நெனச்சி பாத்திருக்கீங்களா? நம்ம வூட்டு புள்ளங்களுக்கு நம்மளால முடிஞ்ச அளவுக்கு கேட்டது, கேக்காததுன்னு வாங்கி கொடுத்து அழகு பாக்குற நாம, இந்த மாதிரி தெருவுல திரியற கொழந்தகள பத்தி ஈஸியா எடுத்துகிட்டு போறோமே ஏன்?

“யோவ் உனக்கு வேற வேலயில்ல, இதே மாதிரி எல்லா விஷயத்துலயும் எதாவது கொற கண்டு புடிச்சுட்டே இரு, அவ அவனுக்கு ஆயிரம் வேலயிருக்கு, நாங்க முடிஞ்ச அளவுக்கு திருப்பதிக்கு வருஷா வருஷம் உண்டியல்ல போட்டுர்றோம்” அப்டின்னு சட்னு சொல்லிட்டு போய்டாதிங்க தோழர்களே... நம்ம எல்லாருக்கிட்டேயும் மனசாட்சி இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கு. அதனால முடிஞ்ச அளவுக்கு உதவி பன்னுங்க.. உதவின்னதும் தர்மமோ, டொனேஷனோ இல்ல..


பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க. தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க.. அப்டி யாரையுமே நான் பாத்ததுல்லன்னு சொல்றவங்க ஏழ பாழைங்க ளோட கொழந்தைகள படிக்க வைக்க எதாவது ஒரு உதவி பன்னுங்க... டிவி, பேப்பர், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ல எவ்வளவோ கொழந்தைகள காணவில்லனு விளம்பரம் வருது, அந்த பெற்றோருக்கு எதாவது துப்பு கொடுத்தீங்கண்னா கூட பெரிய உதவிதான்....(அப்டி தொலச்சவங்க மன நிலய எண்ணி பாருங்க... நம்மூட்டு செல்லங்க, கிழிஞ்ச சட்டயோட தெருவோரத்துல கையேந்துனா எப்டியிருக்கும்? கற்பனையே ஹார்ட் அட்டாக்க வரவழைக்குதுல்ல?)


அநாதைகள் அப்டிங்கற வார்த்தைய நாம நெனச்சா ஒழிச்சிரலாம். ஏன்னா உருவாக்குனதே நாமதான்.. ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்குது, கொரங்கு பூனக்குட்டிய வளக்குது, இதெல்லாம் பேப்பர்ல பாத்துட்டு பிஸ்கெட் தின்னுட்டு போய்டறோம். அப்ப ஆறறிவு உள்ள நம்மளால நாலு புள்ளங்கல எந்த எதிர் பார்ப்பும் இல்லாம வளத்து ஆளாக்க முடியாதா? மனசு வச்சா முடியும்.


_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: நீங்களும் ஹீரோதான்.. - அண்ணாமலையான்

Post by RAJABTHEEN on Fri Feb 11, 2011 5:53 pm

அது மட்டுமல்ல, 2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல....

வயதானவர்கள் இருக்கற முதியோர் இல்லத்துலயும், ஆதரவற்றோர் மற்றும் அநாதை விடுதிகளிலும் இருக்கறவங்க நல்ல சொகுசா இருக்கறாங்களா? இல்ல. எதோ சாப்பாடு கெடச்சாலும் நிம்மதியும், அன்பும் எதிர் பாத்து, கெடைக்காம வாழ்க்கைய முடிவுக்கு கொண்டு வர போராடிக்கிட்டிருக்கவங்கதான் அங்க இருக்காங்க....

நண்பர்களே, உங்களால எந்தளவுக்கு முடியுமோ அத்தன உதவிகளும் செய்யுங்க,, ஆனா நேரடியா செய்யுங்க... இன்னிய தேதிக்கு நாம நம்மளோட வருஷ சம்பளத்துல ஒரு சில நாள் அல்லது ஒரு நாள் ஊதியத்த, சரி வேனாம் அதுல பாதிய செலவு பன்னா கூட அது பெரிய உதவிதான். பாருங்க, சாராய காசு தான் நம்ம நாட்டோட பட்ஜெட்டுக்கு முதுகெலும்பா இருக்குது.. யாரு காசு அது? எல்லாம் நம்ம கொடுத்ததுதான்.. இப்டி பற்பல வழில நாம அழிக்கறதுல ஒரே ஒரு துளி நம்மை போன்ற சக மனிதர்களுக்கு செலவிடலாமெ? அப்டி செலவு பன்ன நெனச்சா, டி.டி. எடுத்து அனுப்பறத விட நேர்ல குடும்பத்தோட போங்க, (தயவு செய்து ப்ரட், பிஸ்கெட் வாங்கிட்டு போறத தவிருங்க, ஏன்னா எல்லாரும் அதயேதான் வாங்குறாங்க, அதனால தேவை என்னன்னு கேட்டு செய்யுங்க) நாலு வார்த்த அவங்களோட அன்பா பேசுங்க, அப்ப அவங்களுக்கு கிடைக்கிற சந்தோஷம்தான் உங்களுக்கு கிடைக்கிற புண்ணியம்... முக்யமா உங்க புள்ளங்களுக்கு, மத்தவங்களுக்கு உதவறது முக்யம், நல்ல விஷயம்னு கத்து கொடுங்க.. இதோ இப்ப கூட இந்த பதிவ படிக்க எதோ ஒரு ப்ரவுசிங் செண்ட்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கற காச கூட வருஷத்துக்கு ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும். எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்..

இதெல்லாம் வாரமோ, மாதமோ போக வேண்டியதில்ல குறைந்த பட்சம் வருஷத்துக்கு ஒரே ஒரு முறையாவது போய் அவங்களுக்கு சந்தோஷம் தந்து உங்க நிம்மதிய கூட்டிக்குங்க... இப்டி விடுதியோ, அநாத ஆஸ்ரமமோ தேட முடியாது / எங்ல ஏரியாவுல இல்லன்னு சொல்றவங்க ஏழ புள்ளங்களுக்கு கல்வி அறிவ கொடுக்க உதவி பன்னுங்க,, பணம் தரலேன்னாலும் ஓய்வு நேரத்துல பாடம் சொல்லி கொடுத்தா கூட போதும்..

அறியாமைய போக்கவும், அன்ப போதிக்கவும் நம்மாளான முயற்சிகள எடுக்கலாம். நாம ஒரு பைசா கூட செலவு செய்யாம நம்ம உடலுழைப்பாலே நாலு பேருக்கு உதவலாம். ஒரு பைசா நமக்கோ, நண்பர்களுக்கோ பிரயோஜனப்படாத, யார் யாருக்கோ கருப்பு பனமா போய் சேர கூடிய பல விஷயங்கள பத்தி வெட்டியா பேசி பொழுத கழிக்கற நேரம், கொஞ்சம் ஆக்க பூர்வமா கருனையோடு செயல் பட்டா, நாளய இந்தியா, நிச்சயம் வல்லரசா மாறலேன்னாலும் மனிதர்களும், மனிதமும் நிறைந்ததா மாறும்... என்றும் உலகளவில் உன்னதமான இடம் பிடிக்கும்.... அதுக்கான மொத அடிய நீங்க ஒவ்வொருவரும் எடுத்து வச்சீங்கன்னா.. மெய்யாலுமே “நீங்களும் ஹீரோதான்”.


ஆகிடுவீங்கள்ல?

-
அண்ணாமலையான்

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: நீங்களும் ஹீரோதான்.. - அண்ணாமலையான்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Feb 12, 2011 7:45 pm

பகிர்வுக்கு நன்றி நண்ப்ரே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நீங்களும் ஹீரோதான்.. - அண்ணாமலையான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum