"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அட நமக்குத்தாங்கோ...

Go down

அட நமக்குத்தாங்கோ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Feb 13, 2011 6:15 pm


டென்ஷனைக் குறைக்க 10 வழிகள். அட நம்மக்குதாங்கோ..

1 வீட்டிலுள்ள சாமான்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைக்கவும், எடுத்த
இடத்திலேயே திரும்ப வைக்கவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழகிக்
கொள்ள வேண்டும். முக்கியமாகப் பேனா, வாட்ச், வாகன சாவிகள், செக்புக்,
கிரெடிட் கார்ட், ரேஷன் கார்ட், பால் கார்ட், பீரோ, வீட்டுச் சாவிகள்,
டெலிபோன் அட்ரஸ் புக் இப்படி முக்கியமான சாமான்களை எடுத்த இடத்தில் திரும்ப
வையுங்கள்.

2. சிலர் பிரச்சனைகளே வராது என்று அசட்டு தைரியத்துடன் அலட்சியமாக
இருப்பார்கள். அங்கு தான் தவறு செய்கிறார்கள். பிரச்சனைகளை எதிர்பாருங்கள்.
மனம் எப்போதும் திட்டமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, கடைசி
நாள் வரை பயண டிக்கெட்டை ரிசர்வ் செய்ய மாட்டார்கள். எல்லாம் அங்கே போனால்
கிடைக்கும் என்ற அலட்சியம், சில சமயம் காலை வாரி விடும். லீவு சமயங்களில்
ஒரு மாதம் முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்வது நல்லது. அது போல் ஏதாவது
ஒரு இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போக வேண்டுமென்றால் (தேர்வு,
இண்டர்வியூ) ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்பலாமே. வழியில் போக்குவரத்து
நெரிசல், ஊர்வலம், மறியல், பந்த் இப்படி எதிர்பாராத தடங்கல் ஏற்பட
வாய்ப்பிருக்கிறது. இதைக் கண்டிப்பாக எதிர்பார்க்க வேண்டும்.

3. காஸ் தீர்ந்து விட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலை இன்று. எப்போதும்
மண்ணெண்ணெய் ஸ்டாக்கில் வைத்துக் கொள்வது நல்லது. சமயத்திற்குக் கை
கொடுக்கும். பாதி வீடுகளில் ஸ்டவ் கூடக் கிடையாது என்பது தான் உண்மை. காஸ்
வரும் வரை இடைக்காலத்தில் உதவுவது ஸ்டவ்தான். மின்சார அடுப்புகளைக் கூட
நம்பமுடியாது.

4. கோடைக்காலத்தில் கூடவே கரண்ட் கட்டையும் எதிர்பார்க்க வேண்டியதுதான்.
மெழுகுவர்த்தி, டார்ச், தீப்பெட்டி எல்லாம் ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள்.
இருட்டில் இதை வாங்கி வைத்திருக்கக்கூடாதா? என்று யாரையும் திட்டி
பிரயோஜனமில்லை.

5. இன்று வாகனங்கள் இல்லாத வீடுகளைப் பார்க்கவே முடியாது. அடுத்த
தெருவுக்குப் போக வேண்டுமென்றால் கூட, ஸ்கூட்டர் அவசியமாகி விட்டது.
எப்போதும் வாகனங்களில் குறைந்தது இரண்டு லிட்டர் பெட்ரோல் நிரப்பி வைத்துக்
கொள்வது நல்லது. அதுபோல் வாகனங்களை சர்வீஸுக்குக் கொடுத்து, நல்ல நிலையில்
எப்போதும் வைத்திருந்தால் தான் வழியில் தகராறு செய்யாமல் ஓடும்.

6. மாணவ மணிகளுக்கு டென்ஷனே தேர்வு தான். அன்றாடப் பாடங்களை அன்றே
முடிப்பதுதான் சிறந்த வழி. மணிக்கணக்கில் வாயால் படிப்பதை விட எழுதிப்
பார்ப்பது மனதில் விரைவில் பதியும். எழுதிப் படியுங்கள்.

7. ஆபீஸ் வேலையோ, வீட்டு வேலையோ எது முக்கியம், எது அவசரம் என்று ஒரு
பட்டியலிட்டு அதன் படி செயல்படுத்துங்கள். டெலிபோன் பில், மின்சார பில்,
பால் கார்டு போன்றவைகளைக் குறிப்பிட்ட தேதியில் கட்டவோ, வாங்கவோ, வேண்டிய
நிர்ப்பந்தம் இருக்கும். அலட்சியமாக சோம்பி இருந்து விட்டு, கடைசி தேதியில்
இங்கும் அங்குமாக அபராதத் தொகையுடன் கட்டும்படி வைத்துக் கொள்ளாதீர்கள்.

8 .தீடீர் விருந்தாளிகள் அல்லது உறவினர்கள் வருவார்கள் என்று எப்போதும்
எதிர்பாருங்கள். வங்கியில் பணம் வைத்திருப்பது நல்லது. எதிர்பாராத
அதிகப்படி செலவுகளைச் சாமாளிக்க உதவும். அது போல் விருந்தாளிகள் வருவது
சாமான்களிலிருந்து அவர்களைச் சுற்றிக் காண்பிக்கப் போகும் இடம் வரை (எந்த
நாளில் எங்கே போக வேண்டும்) மனதில் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஊர் விஷயங்கள் உங்களுக்குத்தானே நன்றாகத் தெரியும். இதனால் கடைசி
நேரக் குழப்பங்கள் குறையும்.

9. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சரி தான். ஆனால் சிறு சிறு உடல்
உபாதைகள் வரத்தான் செய்யும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கேட்கவே வேண்டாம்.
தலைவலி, பல்வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கான
மருந்துகள் எப்போதும் கைவசம் ஸ்டாக் இருக்க வேண்டும். நடுராத்திரியில்
அடுத்த வீட்டுக் கதவைத் தட்ட வேண்டிய அவசியமில்லாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
அதுபோல் பண சக்திக்கோ, உடல் சக்திக்கோ மீறிய வேலைகளை நண்பர்கள் அல்லது
உறவினர்களின் வற்புறுத்தலுக்காக செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.
உதாரணமாக திட்டமிடாமல் நினைத்த நேரத்தில் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு
செய்துவிட்டு உங்களைக் கூப்பிடுவார்கள். பணம் பின்னால் கொடுக்கலாம்… நீ
வந்தால் போதும் என்று வற்புறுத்துவார்கள். இமேஜை காப்பாற்றிக் கொள்ள, போய்
விட்டு வந்து அழுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா? பயண ஒவ்வாமை, பணத்
தட்டுப்பாடு இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். வறட்டுக்
கெளரவத்திற்குத் தலையைக் கொடுத்து விட்டு, உடல்நலம் கெட்டுப் போவதுடன்,
பணமும் கரைந்து போவதுதான் மிச்சமாகும். கூடவே வீட்டில் உள்ளவர்களிடம்
டென்ஷனுடன் கத்திக் கொண்டிருப்பீர்கள்.

10. ஸ்டிரைக், அடை மழை காலங்களில் ஓரிரு தினங்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு
அனுப்புவானேன். வீண் டென்ஷனை விலைக்கு வாங்குவானேன்? குழந்தைகள்
பள்ளியிலிருந்து வரும் வரை, வாசலுக்கும் உள்ளுக்கும் நடக்க வேண்டிய டென்ஷனை
குறைக்கலாமே. சிறிய கிளாஸாக இருந்தால் லீவு போடுவது தவறில்லை. போர்ட்
எக்ஸாம் எழுதப்போகும் குழந்தைகள், ஒன்று மழை நின்ற சமயத்தில் முன்னதாகக்
கிளம்பலாம். இல்லை, பொறுப்பாக அவர்களைக் கொண்டு விட்டு வரலாம்.

முடிவாக அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முக்கால்வாசி
டென்ஷன்களுக்கு நாமே தான் காரணம். பலதும் தவிர்க்கக் கூடியது.
எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் அலட்சியப்போக்கு, திட்டமிடாமை, அதை விட
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்புகள் தான். இதையும் மீறி வாழ்க்கையில்
எதிர்பாராத டென்ஷன்கள் வரலாம். வரும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும்
நண்பர்களின் உதவி, பணபலம் மற்றும் வாகன வசதி இருந்தால் ஓரளவு சமாளித்து
விடலாம்.

இதைவிட, மனதில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதிகம் டென்ஷனாகிறார்கள்.
எந்தப் பிரச்சனைகளையும் குடும்பத்தாருடன் நிதானமாகப் பேசி, கலந்தாலோசித்து
முடுவு எடுங்கள். வயதில் சிறியவர்களானாலும் சில சமயம் சிறந்த யோசனைகளைக்
குழந்தைகள் கூடக் கொடுப்பார்கள். குடும்பத்தில் மன ஒருங்கிணைப்பு இருந்து
விட்டால் டென்ஷனுக்கு இடமேயில்லை.

11. என்ன படிச்சிமுடிச்சாச்சா. சரி
எவ்வளவுக்கெவ்வளவு டென்ஷனை குறைக்கமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு நம்
உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது
நடப்பது நடந்தே தீரும். நடப்பதற்கு முன்
யோசிக்கவேண்டியைகளை விட்டு விட்டு நடந்துமுடிந்தபின் வருத்தப்படுவதில்
அர்த்தமேயில்லை. ஆகவே டேக்கிட்டீஸி பாலிஸின்னு எதையும் ஈஸியாக
எடுத்துக்கொண்டு. [அதுக்காக எல்லாதிலும் அல்ல இருப்பதில் கவனமாக
இருந்துகொண்டு] வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டே செல்லுங்கள். அனைத்தும்
நன்மையாக முடியும். இது இதுமட்டும்தான் நம்மோடது மற்ற மேலே உள்ள பத்து
வழிகளும் நமக்கு மெயிலில் வந்தது அதை உங்களுக்கு அறிவிக்கத்தான் இந்த
பதிப்பு எப்புடி..


நன்றி மலிக்கா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அட நமக்குத்தாங்கோ...

Post by கவிக்காதலன் on Mon Feb 14, 2011 12:31 am

தகவலுக்கு நன்றி!!!

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum