"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Today at 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Today at 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Today at 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Today at 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Today at 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Today at 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Today at 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Today at 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இறந்தவன் பேசுகிறேன் -குறுநாவல்

Go down

இறந்தவன் பேசுகிறேன் -குறுநாவல்

Post by shanmugam on Wed Feb 23, 2011 5:50 pm

sa.jpgஅத்தியாயம் -1

சென்னை, தாம்பரத்திலிருந்து செல்லும் ரயில் அது. புதியதாய் சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். இரவு வந்தது. ஒரு இடத்தில் வண்டியின் முன் புறத்தில், ஒரு பெண் உருவம் வண்டியை, ''நிறுத்துங்க ""நிறுத்துங்க" ன்னு கத்த, அலறிப் போய் இருக்கிறார் டிரைவர். பக்கத்துல இருந்த டிரைவர் "ஒண்ணும் பயப்படாதிங்க, இவங்க இந்த வண்டில அடிபட்டு செத்து போனவங்க. அடிக்கடி இந்த மாதிரி வருவாங்க. உங்களுக்கு கொஞ்ச நாள் ல பழகிடும்" ன்னு சொல்ல கதி கலங்கி போயிருக்கிறார் அவர்.

டி கே எம் கல்லூரி ஆம்புலன்ஸ் சத்தத்தோடு வரவேற்றது. வேகமாக இறங்கிய ஸ்ட்ரச்சர், லைப்ரரியில் நுழைந்தது.
அங்கு சதை கூழமாய் ரத்த வெள்ளத்தில் இருந்தார் பரந்தாமன். ரத்த திட்டுகள் உறைந்து, ஹீமோக்லோபின் காற்றில் கலந்து கறுப்பு நிறத்தில் இருந்தது ரத்தம். "என்ன நடந்தது? யார் பண்ணினாங்க?" விசாரிக்கத் தொடங்கினார் நந்தா. 'கிரிமினல் பீரோ' வை சேந்தவர். "ஏதோ கூர்மையான ஆயுதத்துல தாக்கி இருக்காங்க. தோள் பட்டை துண்டாகி இருக்கு சார்" பதிலளித்தார் அவரின் உதவி யாளர் சந்திரன்.


அத்தியாயம் -2
ஊட்டி கொடைக்கானல் சூசைட் பாயிண்ட்களில் தற்கொலை செய்பவர்களின் சடலங்களை எடுப்பவரிடம், "ஆவி,பேய் இது போல ஏதாவது நீங்க உணர்ந்து இருக்கீங்களா" ன்னு கேட்க, "எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. ஒரு நாள் நான் இந்த மாதிரி சடலத்த தேடி போனபோது ஒரு பெண், கைல வாட்டர் கான், சாக்லட் வச்சிக்கிட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல நின்னுகிட்டு இருந்தாங்க. கொஞ்சம் நினைவு பண்ணி பார்த்தா, ரெண்டு நாள் முன்னாடி நான் தான் அவங்க சடலத்த எடுத்துகிட்டு மேல வந்தேன். மலையை சுத்தி பார்த்தவங்க கால் தவறி கீழ விழுந்து இறந்து போய் இருக்காங்க. நான் பார்த்தது அவங்களத்தான்."

"நீதாண்டா அவசரப் பட்டுட்ட" கொந்தளித்தான் பிரதாப். ''டேய் நான் என்ன பண்றது?. நாம எவ்ளோ கேட்டு பார்த்தோம். அந்த ஆளு அந்த புதையல் இருக்குற வீட்டை சொல்லவே இல்லை. அதான் ஆத்திரத்துல அடிச்சிட்டேன்." கூலாக பதிலளித்தான் அகிலன்.

"சரி விடு. தப்பு பண்ணிட்டோம். இனி இதுல இருந்து தப்பிக்கிற வழிய பாரு. என்ன புரியுதா?"

"சரிடா பிரதாப்" ஆமாதித்து கொண்டான் அகிலன்.

அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தனர்
கி .பி -150 பல்லவர்களின் ராஜநிர்வாகம் நடந்து கொண்டிருந்த ஓர் சிற்றூர் வீரபோகம்.
அழகு நிறைந்த கோவில்களும், நீர் நிறைந்த குளங்களும், வயல் நிறைந்த நிலங்களும் ஒரு சேர அமையபெற்றதே வீரபோகம். இங்குதான் ருத்ர தாமன் எனும் பல்லவ மன்னன் ஆட்சி புரிந்தான். இயற்கை தன் அடுத்த பரிமாற்றத்தினால் இவை அனைத்தும் வரலாறுகளாகி விட்டன. வாசலில் போட்ட கோலம் மாறுவதுபோல இவரின் சந்ததிகள் இருந்த இடம் இல்லாமல் போகவே அடுத்து வந்த காலகட்டங்களில் சாம்ராஜ்யத்தில் கொள்ளை அடிக்கப்பட்டு விட, இருந்த இடம் இல்லாமல் போய் விட்டது இந்த வீரபோகம் .அத்தியாயம் -3
செங்கல் பட்டு விரைவு சாலை. மதியம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அந்தப் பக்கம் செல்லும் வாகனங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக சென்றாலும் விபத்தில் சிக்கி விடுகிறது. காரணம், அங்கு வசிக்கும் முனிவர்கள், இந்தப் பக்கத்துல இருக்குற மலைல இருந்து அந்த பக்கத்து மலைக்கு நடந்து போவங்களாம். விபத்துக்கு காரணமும் அதுவே.

ஃபாரன்சிக் அதிகாரிகள் பரந்தாமனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து நந்தாவிடம் சமர்பித்தார்கள். "தோள் பட்டைல பலமா அடிச்சி இருக்காங்க. எலும்பு துண்டாகிருக்கு சார்".

"ஓகே தேங்க்ஸ்"

"எதுக்கு இந்த கொலை நடந்ததுன்னு புரியலயே. அவர்க்கு யாராவது காலேஜ்ல விரோதிங்க இருக்காங்களா? பின்னே எப்படி?" சிந்தனையுடன் நந்தா நடக்க, அவனின் செல்போன் சிணுங்க, அதை உயிர்ப்பிக்க செய்து பேசினான்


அத்தியாயம் -4
சென்னை சாத்துமா நகரில் வசித்து வந்த முதியவர் இறந்த சில நாட்கள் கழித்தும் அவரை அந்த இடத்தில் சிலர் பார்த்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் தடியை ஊனியபடி செல்லும் முனகல் சப்தமும் சில நாட்கள் கேட்டுகொண்டிருந்ததாம்.

"பிரதாப் எழுந்திருடா.. நாம இன்னைக்கு அந்த வீட்டுக்கு போகணும்.. அந்த ரூம் புல்லா இருக்குற எல்லா நகைகளும் நமக்குதான்டா"

"டேய் எல்லாம் சரிடா.. அந்த வீட்டுக்குள்ள எப்படி போறது?"
"அதுக்கு ஒரு வழி இருக்குடா? என்னடா? நாம ஏற்கனவே பண்ணதுதான் புரியலையா? கொலை தான்?"

"டேய்! என்னடா பேசுற?"
"ஹே!! பயப்படாதே கொலை மாதிரி செஞ்சா தானே போலீஸ் நம்மள கண்டுபிடிக்கும். அது வெளிய தெரியாத மாதிரி பண்ணிடலாம்"
"என்னடா பண்ண போற''

"இரு சொல்றேன். நான் பார்த்த ஒரு இங்கிலீஷ் படத்துல, இப்படித்தான் கொலை பண்ணுவாங்க என்ன சரியா?'' சொல்லிக் கொண்டே விளக்க ஆரம்பித்தான் அகிலன்.


"சரி. முதல் சோதனை யார் மேல பண்ண போற?"

"வெயிட் அண்ட் சி ''வீட்டுக்குள்ளே நுழைந்த அகிலன், தான் ஒளித்து வைத்திருந்த ஊசியை, வேலைக்காரி மீது செலுத்தினான்.

மயங்கிய அவள் கீழே சாய்வதற்குள், உள்ளே சென்ற மருந்து வேலை செய்தது. உடல் முழுவதும் நீர் நிரப்பிய பலூன் போல விரிவடைந்து, கீழே சாய்ந்த உடன், சுக்கு சுக்காக தெறித்தது. வெறும் எலும்புக் கூடு மட்டுமே மிஞ்சியது.

ஒளிந்திருந்த பிரதாப், "டேய், நான் இதை நம்பவே இல்லடா. எப்படிடா இது?''
"இரு சொல்றேன். இதுல கலந்து இருக்குற மருந்து என்ன தெரியுமா? ஒரு வித வைரஸ்! இது நம்ம நாட்ல கிடைக்காது.
அமேசான் காட்ல இருக்குற ஒரு குளத்துல இருக்குற கிருமிங்க. விஞ்ஞானிங்க அந்தப் பக்கமா போன போது தாகம்ன்னு இந்த குளத்து தண்ணிய குடிச்சி இருக்காங்க. குடிச்சவங்க எல்லாம் அவுட். அப்பதான் கூட இருக்குறவங்க இதைப் பாதுகாத்து, இப்படி சில விசயங்களுக்கு பயன்படுத்திட்டு இருக்காங்க."அந்த பிணத்தின் அருகில் ஒரு அட்டையில் ''இறந்தவன் பேசுகிறேன்'' என எழுதி வைத்து விட்டு சென்று விட்டார்கள் இருவரும்.

அத்தியாயம் -5
மயானத்தை ஒட்டிய சாலை வழியே இரவு பணி முடித்து வந்து கொண்டிருந்த ஒருவருக்கு, பெண் ஒருவரின் அழுகுரல் கேட்க தேடி இருக்கிறார் அவர். தூரத்தில் ஒரு கிணற்றின் சுவரில் சாய்ந்து கொண்டு அழுதுகொண்டிருக்கிறது ஒரு உருவம். அருகில் சென்று பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் அந்த கிணற்றில் குதித்து இறந்தவளாம் அவள்.

"இதுக்கான மோடிவ் என்னவாக இருக்கும்? பரந்தாமன் கொலைக்கும், இந்தக் கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?" சந்திரன் குறுக்கிட்டு, "எஸ் சார். இந்த ரெண்டு கொலைகளும் கொஞ்சம் பயங்கரமா செய்யப்பட்டு இருக்கு. சோ, இத நாம வேற ஆங்கிள்ல பாக்கணும்."

"லெட்ஸ் ஸீ''. நந்தா அங்கு லைப்ரரி இல் கிடைத்த அடையாள அட்டையை பார்த்து கொண்டிருந்தார்.

"இது எனக்கு கிடைச்ச எவிடன்ஸ். இது யார்?ன்னு எனக்கு தெரியனும். வித் இன் ஹாப்ப்னவர். யு காட் இட்." சந்திரன் ஆச்சரியமாய் அந்த அட்டையை வாங்கிப் பார்த்தான். பிரதாப் அழகாக சிரித்து கொண்டிருந்தான் அதில்.

அத்தியாயம் -6
காஞ்சிபுரம் பல்லவர் மேடு எனும் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண் ஒருவர், தினமும் அங்கு நடமாடுவதாக சொல்ல படுகிறது. இரவு நேரத்தில் அங்கு கொலுசொலியும் கேட்டு கொண்டிருக்கிறதாம்.

மாலை நேரம் பூமிக்குள் புதைவது போல் காட்சி அளித்தது சூரியன்.
"டேய் அகிலா! அடுத்து என்ன பண்றதா உத்தேசம் உனக்கு? நீ பாட்டுக்கு திடீர் திடீர்ன்னு எதாவது பண்ற. இனிமேலாவது என்கிட்ட சொல்லிட்டு பண்ணுடா"

''என்னத்த உன்கிட்ட சொல்றது? உன் ஐ டி கார்ட தொலைச்சிட்டு வந்து நிக்குற. முதல்ல உன்னை கொல்லணும்டா''

"டேய் அகிலா, என்னை மன்னிச்சிடுடா. எப்படி மிஸ் ஆச்சுனு எனக்கு தெரியல"

"என்ன தெரியல? அதுமட்டும் போலீஸ் கைல மாட்டுனா என்னாகும் தெரியும்ல? ரெண்டு பேரும் களி கிண்ட வேண்டியதுதான்'' என சொல்லிகொண்டே பிரதாப்பை நோக்கி முன்னேறினான் அகிலன்.

அத்தியாயம் -7

நந்தாவின் நோக்கியா சிணுங்கியது. எடுத்து காது பக்கத்தில் ஒத்தடம் கொடுக்க. ''ம் சொல்லுங்க சந்திரன். கேஸ் ல ஏதாவது புதுசா கிடைச்சிருக்கா?"

"எஸ் சார். அந்த ஐ டி கார்டுல இருக்குறவன் பேரு பிரதாப். அந்த காலஜ் ஸ்டுடென்ட் தான்."

"ஓகே. தட்ஸ் குட். நான் நினைச்சது சரியா போய்டுச்சி"

"சார், அனொதெர் இன்பார்மாசென் சார்"

"டெல் மீ சந்திரன்."

"சார், கொலை நடந்த நாள்ல இருந்து ரெண்டு பசங்க காலேஜ்க்கு வரதில்ல சார். ஒருத்தன் அகிலன். இன்னொருத்தன் பிரதாப்"
அத்தியாயம் -8

இருளுக்கும் ஒளிக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இருள் லாவகமாக விலகி கொண்டிருந்த காலை நேரம். அழகான சந்தன மாலையுடன் நின்ற வாக்கில் புகைப்படத்தில் இருந்தார் ருத்ர தாமன். கீழே ஊது பத்தி மார்கழி மாத பனி போல் புகையை வீடு முழுவதும் படர விட்டிருந்தது .

உள்ளே நுழைந்த அகிலன், பிரதாப்பைக் கொன்ற கத்தியின் ரத்த கறையோடு வந்திருந்தான்.

("டேய் அகிலா!! ஏன்டா அப்படி பாக்குற?"

"மவனே நீ செஞ்ச காரியத்தால, நாமதான் கொலை பண்ணினோம்னு போலீஸ்க்கு தெரிஞ்சு போய்டுச்சி. இதுக்கு மேல உன்னை விட்டா நானும் மாட்டிக்குவேன். என்னை மன்னிச்சிடுடா" என சொல்லி கொண்டே கத்தியோடு முன்னேற, பிரதாப் அங்கு நடப்பதை சுதாரித்து கொள்வதற்குள், ஒரு எட்டு சென்டி மீட்டர் ஆழத்திற்கு கத்தி அவனது வயிறை பதம் பார்த்தது. மறுபடியும் ஒரு குத்து. ரத்தம் தரையைக் கழுவிக் கொண்டிருந்தது.)

உள்ளே நுழைந்த அகிலன் அந்த அறையை தேடுவதற்குள்......

அத்தியாயம் -9

"சந்திரன், நான் சொன்ன மாதிரி கொலை நடந்த வீட்ல பாதுகாப்புக்கு போலீஸ் போட்டு இருக்கீங்களா?"

"ஆமாம் சார்.. சார், நானே உங்களுக்கு கால் பண்ணனும்னு இருந்தேன்."

"என்ன விஷயம்? சொல்லுங்க.."

"நாம தேடிகிட்டு இருக்குற பிரதாப், கொலை செய்யப்பட்டு இருக்கான் சார்!!"

"என்ன?" நந்தா ஆச்சரியத்தோடு வினவ,

"ஆமாம் சார். அகிலன் தான் அவனைக் கொலை பண்ணி இருக்கணும்"

ஆமோதித்த நந்தா, தன் நோக்கியாவை அணைப்பதற்குள், மறுபடியும் ஒரு அழைப்பு வர, "சார், நான் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் பேசுறேன் சார். நாம நினைச்சா மாதிரி, அகிலன் அந்த வீட்டுக்கு வந்து இருக்கான் சார். அங்க மப்டில இருந்த நம்ம ஆளுங்க அவனைக் கையும் களவுமா பிடிச்சி இருக்காங்க."

"ஓ! அப்படியா நான் இப்பவே வறேன்". சந்திரனுக்கு விசயத்தை சொல்லி, நந்தா தன்னுடைய பொலிரோவை ஸ்டார்ட் செய்ய ஒரு இருமல் இருமியது போல் வண்டி புழுதியைக் கிளப்பிக்கொண்டு கிளம்பியது.அத்தியாயம் -10
வீடு.

அகிலன், நந்தா, சந்திரன், பன்னீர் செல்வம், மற்ற ஏட்டுகள்.

"சொல்லு.. எதுக்கு மூணு பேரை கொலை பண்ணின? இந்த வீட்ல என்ன இருக்கு? ஒழுங்கா சொன்னால் சிம்பிள். விஷயத்த முடிச்சிடலாம். இல்லேன்னா...எங்களப் பத்தி தெரியும்ல?" மிரட்டலாய் ஆரம்பித்தார் நந்தா.

"சொல்லிடுறேன் சார். இந்த வீட்லப் புதையல் இருக்கு. நான் ஒரு புத்தகத்துல படிச்சி இருக்கேன். அந்த புத்தகத்தக் கேட்டுதான் பரந்தாமனை கொலை பண்ணினேன். அந்த வீட்ல உள்ளவங்கள பயமுறுத்த வேலைகாரிய கொன்னேன். அங்க இறந்தவன் பேசுகிறேன் அப்படின்னு எழுதுனதும் நான் தான். எங்கே நான் மாட்டிகுவேன்னொன்னு பிரதாப்ப கொலை பண்ணினேன். எப்படியாவது அந்த பொருள்களை எடுத்துகிட்டு தப்பிச்சி போய்டலாம்னு இங்க வந்தேன். உங்க கிட்ட மாட்டிகிட்டேன்." முழுவதையும் சொல்லி முடித்தான் அகிலன்.

"சரி.. அந்தப் புதையல் இருக்குற அறையை காட்டு.. வா" அழைத்தார் நந்தா.

தன் கையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து தேட முனைகையில், கண்ணில் பட்டது அந்த அறை. உள்ளே நுழைந்த அவர்கள் மிதப்பதை போல் உணர்ந்தனர். "ஏன் இந்த மாதிரி இருக்கு இந்த அறை?"

"அது பழங்கால கட்டிட முறை சார். இந்த அறையில மட்டும் புவி ஈர்ப்பு விசை இருக்காது அதான்"

சோதனை செய்ய, நந்தா தன் நோக்கியவை காற்றில் விட, அது அழகாக மிதக்க ஆரம்பித்தது. எல்லாரும் ஆச்சரியமாக பார்க்க "இந்த இடத்துலதான் சார் புதையல் இருக்கணும்." அகிலன் சொல்லி முடிக்க, "பன்னீர் செல்வம், இவனைக் கூட்டிகிட்டு போங்க" நந்தா உத்தரவிட, சல்யுட் அடித்து அவனை அழைத்து சென்றார் இன்ஸ்பெக்டர்.

சிறிது நேர காத்திருப்புக்கு பின், அந்த இடம் தோண்டப்பட உள்ளே, பழைய கால பொருள்கள், நகைகள், கண்ணைப் பிரகாசிக்கும் அளவிற்கு இருந்தது. அங்கு இருந்தவர்கள் வாயை பிளக்க, நந்தா கையில் கிங்க்ஸ் யை புகைத்தவாறே நின்று கொண்டிருந்தார். ஜன்னலில் பன்னீர் செல்வம், அகிலனைத் தலையில் தட்டியவாறே வண்டியில் ஏற்றி கொண்டிருந்தார்.


முற்றும்-
பா ;சண்முகம்
avatar
shanmugam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 30
Location : Chennai

Back to top Go down

Re: இறந்தவன் பேசுகிறேன் -குறுநாவல்

Post by RAJABTHEEN on Wed Feb 23, 2011 7:13 pm

மிகவும் அழகாக உள்ளது தாங்களின் கதைகள் பாராட்டுக்கள் தொடருங்கள் உங்கள் சிறந்த படைப்புகளை

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: இறந்தவன் பேசுகிறேன் -குறுநாவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Feb 23, 2011 7:35 pm

அழகான குறு நாவல் நண்பரே... இவ்வள்வு நாட்களும் மறைத்து வைத்திருந்தீங்களோ... அடிக்கடி வந்து நாவல் கதை என தாருங்கள்....

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இறந்தவன் பேசுகிறேன் -குறுநாவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum